Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
‘உங்க வீட்டுக்கு மேல ஐஎஸ்எஸ் பறக்குது’ : எஸ்எம்எஸ் அனுப்புது நாசா
Page 1 of 1
‘உங்க வீட்டுக்கு மேல ஐஎஸ்எஸ் பறக்குது’ : எஸ்எம்எஸ் அனுப்புது நாசா
நியூயார்க்: சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் எங்கு பறக்கிறது என்று
எஸ்எம்எஸ் மூலம் மக்களுக்கு தெரிவிக்கும் சேவையை நாசா தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ரஷ்யா, ஜப்பான், கனடா,
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் விண்ணில்
செலுத்தப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது ‘ஐஎஸ்எஸ்’ சர்வதேச விண்வெளி
ஆராய்ச்சி நிலையம். இதில் இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்
உள்பட 6 பேர் தங்கியிருந்து தற்போது ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராக்கெட்களை நிலைநிறுத்தும் தளம், ஆய்வுக் கருவிகள், விஞ்ஞானிகள் தங்கி
ஆய்வு நடத்தும் பகுதி என மொத்தம் 450 டன் எடை கொண்ட ஐஎஸ்எஸ், பூமியில்
இருந்து சராசரியாக 370 கி.மீ. உயரத்தில் பறந்தபடி பூமியை தினமும் 15 முறை
சுற்றி வருகிறது.
சூரியன், சந்திரனுக்கு அடுத்தபடியாக வானில்
பளிச்சென்று தெரியும் பொருள் என்பதால், அதிகாலை மற்றும் மாலை நேரத்தில்
டெலஸ்கோப் உதவியின்றி வெறும் கண்ணாலேயே ஐஎஸ்எஸ்-ஐ பார்க்கலாம் என்று நாசா
கூறியுள்ளது. அதை பார்க்க விரும்புபவர்களின் வசதிக்காக புதிய எஸ்எம்எஸ்
சேவையை நாசா தொடங்கியுள்ளது. அதாவது, ஐஎஸ்எஸ் பறந்துவரும் பகுதியில்
உள்ளவர்களுக்கு ‘உங்கள் வீட்டின் மீது ஐஎஸ்எஸ் பறக்கிறது’ என்று நாசா
எஸ்எம்எஸ் அனுப்புகிறது. ஐஎஸ்எஸ் செயல்பட தொடங்கி 12 ஆண்டுகள் ஆவதை
குறிக்கும் வகையிலும், மக்களுக்கு ஐஎஸ்எஸ் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி
மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாக நாசா
இணை நிர்வாகி வில்லியம் கெர்ஸ்டன்மயர் தெரிவித்துள்ளார்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum