Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

January 2022
MonTueWedThuFriSatSun
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      

Calendar Calendar

www.housetamil.blogspot.in

வத்திக்குச்சி திரை விமர்சனம்

Go down

வத்திக்குச்சி திரை விமர்சனம் Empty வத்திக்குச்சி திரை விமர்சனம்

Post by Admin Thu Mar 21, 2013 12:34 am

வத்திக்குச்சி திரை விமர்சனம் D82ab50b-e783-4a59-a1ca-bca1ce38a127_S_secvpf
சென்னையின் புறநகரில் சமத்துவபுரம் குடியிருப்பில் வசிக்கும் ஷேர் ஆட்டோ
டிரைவர் திலீபனுக்கு அதே குடியிருப்பில், ஸ்ப‌ோக்கன் இங்கிலீஷ்
இன்ஸ்டியூட்டில் படிக்கும் அஞ்சலி மீது காதல். அடிக்கடி தன் ஷேர் ஆட்டோவில்
பயணிக்கும் அஞ்சலியிடம் தனது காதலை திலீபன் சொல்ல, அஞ்சலியோ அவர் மீது
காதல் ஆசை இருந்தாலும் அதை வெளிப்படையாக காட்டாமல் இழுத்தடிக்கிறார்.
இந்நிலையில் திலீபன் தனது தங்கை பிறந்தநாளுக்காக அனாதை குழந்தைகளை
அழைத்துக் கொண்டு தனது குடும்பத்தினருடன் பார்ட்டிக்கு போகிறார். அப்போது,
ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொண்டு வெளியே வரும் திலீபனின் கழுத்தில் கத்தியை
வைத்து பணத்தைப் பறித்துச் செல்கிறார்கள் சம்பத்தின் அடியாட்கள்.

தன்னுடைய அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எப்படியாவது திரும்பப்
பெற்றுவிட வேண்டும் என துடிக்கும் திலீபன், இதற்காக ஜிம்முக்கு போய் உடம்பை
ஏற்றி, சண்டைப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு சம்பத்தின் அடியாட்களுடன்
மோதுகிறார். அவர்களை வீழ்த்திவிட்டு சம்பத்திடம் மோதி பணத்தை பிடுங்கிச்
செல்கிறார். இதனால் தனது வாழ்க்கையை இழந்து தவிக்கும் சம்பத், திலீபனை கொலை
செய்ய முடிவெடுக்கிறார்.

வருமான வரித்துறை அதிகாரியை கொலை செய்ய முயற்சிக்கும் நகைக்கடை அதிபரான
ஜெயப்பிரகாஷின் திட்டத்தை ஒட்டுகேட்ட திலீபன், அந்த கொலை முயற்சியை தடுத்து
விடுகிறார். இதனால் ஜெயப்பிரகாஷும் திலீபனை தீர்த்துக்கட்ட நினைக்கிறார்.

அதே சமத்துவபுரத்திலேயே குடியிருக்கும் ஜெகன், ஒரு பெரிய புள்ளியின்
மகனைக் கடத்தி பணம் வசூலிக்கத் திட்டமிடுகிறான். அதற்கு தடையாக திலீபன்
இருப்பதை அறிந்து அவனை தீர்த்துக்கட்ட எண்ணுகிறான்.

இப்படி ஒருவருக்கொருவர் தங்களுடைய பகையை தீர்த்துக்கொள்ள துடிக்கும்
இவர்களிடமிருந்து திலீபன் தப்பித்தாரா? தான் காதலிக்கும் அஞ்சலியை கரம்
பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

நாயகன் திலீபன் புதுமுகம் என்றாலும், நடிப்பைவிட சண்டை காட்சியிலேயே
நன்றாக நடித்திருக்கிறார். கட்டுமஸ்தான உடல் வாகு, அதற்கேற்ற உயரம் என
எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறை இருப்பதுபோல் தெரிகிறது. இவருடைய
அடுத்தடுத்த படங்களில் அதை சரிசெய்து கொள்வது அவருக்கு நலம் பயக்கும்.

அஞ்சலி வழக்கம் போல் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். “என்னை
பலபேர் பார்த்து காதலிக்கிறான். அவன்கிட்ட எல்லாம் நான் போய் கூடாதுன்னு
சொல்ல முடியுமா? அது மாதிரி தான் உன்கிட்டயும் சொன்னேன்” என்று திலீபனைப்
பார்த்து கூறும்போது அவர் கண்களே ஆயிரம் கவிதைகள் பேசுகிறது.

விறுவிறுப்பான த்ரில்லர் கதையை கொடுக்க இயக்குனர் கின்ஸ்லின்
முயன்றிருக்கிறார். கதைக்காக அவர் தேர்வு செய்த ஜெகன், ஜெயப்ரகாஷ், சம்பத்,
சரண்யா, ராஜா என ஒவ்வொருவரும் அருமை. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில்
கதாநாயகன் மற்றவர்களை துவம்சம் செய்வதை நம்பும்படியான காட்சிகளை வைத்தது
வித்தியாசமான அதே சமயம் புத்திசாலித்தனமான காட்சியும்கூட.

ஜிப்ரானின் இசையில் மூன்று பாடல்கள் இனிமை. ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு இயல்பாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘வத்திக்குச்சி’ அனைவரையும் பத்திக்கும்.

Admin
Admin

Posts : 201
Join date : 15/03/2013

https://dinatamil.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum