Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

March 2024
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Calendar Calendar

www.housetamil.blogspot.in

தமிழக பட்ஜெட் தாக்கல்

Go down

தமிழக பட்ஜெட் தாக்கல் Empty தமிழக பட்ஜெட் தாக்கல்

Post by Admin Fri Mar 22, 2013 12:26 am

2013 - 2014 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக நிதியமைச்சர் ஒ. பன்னீர் செல்வம்
தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், 2013 - 14 நிதியாண்டுக்கான
பட்ஜெட்டில், பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள்
அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். வறட்சியால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா
மாவட்டங்கள் அல்லாத விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று பன்னீர்
செல்வம் அறிவித்தார்.


காவல்துறைக்கான நிதி ஒதுக்கீடு இந்த
ஆண்டு 4 ஆயிரத்து 706 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர்
தெரிவித்தார். மேலும், வறுமையை ஒழிக்கும் நடவடிக்கையாக 110 வட்டாரங்களில்
புதுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தர்.


மின்சார தட்டுப்பாட்டை போக்கும் விதமாக
மின் மற்றும் கட்டமைப்பு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
என்று பன்னீர் செல்வம் கூறினார். 2014 - ம் ஆண்டு வரை மானிய விலையில்
துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்கப்படும் என்றும் பன்னீர் செல்வம்
கூறினார்.


2011-ல் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மூன்றாவது முறையாக இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

ஈழத்தமிழர் நலனுக்காக தமிழக முதல்வர் எடுத்த நடவடிக்கைகளுக்கு நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்தார்.

பெரும் சவால்களுக்கு இடையே தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக தெரிவித்தார்.

திமுக வெளிநடப்பு: பட்ஜெட்
கூட்டத்தொடர் தொடங்கும் முன் பேரவையில் பேச திமுக அனுமதி கோரியது. அனுமதி
மறுக்கப்பட்டதால் ஸ்டாலின் உள்பட திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


பட்ஜெட் துளிகள்:


  • காவிரி டெல்டா மாவட்டங்கள் அல்லாத மற்ற மாவட்ட விவசாயிகளுக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும்
  • மின்சாரத்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என அறிவிப்பு. கட்டமைப்புத் துறைக்கும் கூடுதல் முக்கியத்துவம்.
  • சிறு, குறு, நடுத்தர தொழில்நிழுவனங்களுக்கு சிறப்பு நிதி ஊக்குவிப்பு
  • நகர்ப்புற வீட்டுவசதித் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு
  • கூடுதல் காவலர் நியமனம்: இந்த நிதி ஆண்டில் கூடுதலாக 17,138 காவலர்களை தேர்வு செய்ய திட்டம். 1091 துணை ஆய்வாளர்களை தேர்வு செய்யவும் திட்டம்
  • நில மோசடி தடுப்புச் சட்டம் மூலம் 2,700 ஏக்கர் நிலம் மீட்பு
  • 1,500 தீயணைப்பு வீரர்கள், 212 சிறைக் காவலர்கள் நியமிக்கப்படுவர்.
  • தீயணைப்பு துறைக்கான ஒதுக்கீடு ரூ.208
    கோடியாக அதிகரிப்பு. சிறைத்துறைக்கு ரூ.179கோடி நிதி ஒதுக்கீடு.
    காவல்துறைக்கு ரூ.4,706 கோடி நிதி ஒதுக்கீடு

  • வீட்டு மனைப்பட்டா: 2 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
  • ஆதார் அடையாள அட்டை வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்
  • வறுமையை ஒழிக்க முடிவு: வறுமையை ஒழிக்கும் விதமாக மேலும் 110 வட்டாரங்களில் புதுவாழ்வு மையம் அமைக்க முடிவு
  • நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு ரூ.99.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • வேளாண் துறைக்கு அதிக நிதி: வேளாண்
    துறைக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு
    செய்யப்பட்டுள்ளது. ரூ.5189.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். 2வது
    பசுமை புரட்சிக்கான நடவடிக்கைகள் தீவிரம்.

  • உழவர் பெருவிழா நடத்த ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு
  • தோட்டக்கலை வளர்ச்சிக்கு ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு
  • வரிச்சுமை குறைக்க முடிவு: மக்களுக்கு கூடுதல் வரிச் சுமை கொடுக்காமல் மதிநுட்பத்துடன் நிதி மேலாண்மை செய்ய முடிவு
  • பயிர்க்கடன் இலக்கு: பயிர்க்கடனாக ரூ.39,135 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • காய்கறி கழிவு சுத்திகரிப்புத் திட்டத்திற்கு ரூ.34 கோடி ஒதுக்கீடு
  • கால்நடை வளர்ப்புத் திட்டத்திற்கு ரூ.1082 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பெண்களுக்கு 12,000 கறவை மாடுகள், 6 லட்சம் செம்மறி ஆடுகள் வழங்கப்படும்
  • நுண்ணுயிர் பாசனத்திற்கு திரவ உரங்கள் வாங்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு
  • மெட்ரோ திட்டத்திற்கு நிதி: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு
  • மீனவர் நலனுக்கு நிதி: மீனவர்
    நலத்திட்டங்களுக்காக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது கடலூர்
    மாவட்டம் முடசலோடையில் ரூ.7.78கோடி செலவில் மீன் இறங்கு தளம்
    அமைக்கப்படும். மீன் பிடிப்புத் தடை கால நிவாரணத்திற்கு ரூ.200 கோடி நிதி
    ஒதுக்கீடு.

  • தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும்
  • உணவு மானியத்திற்கு ரூ.4,900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
  • பாமாயில், துவரம் பருப்பு குறைந்த விலையில் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • அணை புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.399 கோடி நிதி ஒதுக்கீடு
  • பாரம்பரிய நீர் நிலைகளை மேம்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு
  • பள்ளி கல்விக்கு நிதி: பள்ளிக் கல்வித் துறைக்கு அதிகபட்சமாக ரூ.16,965 கோடி நிதி ஒதுக்கீடு.
  • நீதித்துறைக்கு ரூ.695 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சூரிய ஒளி மின்சக்தி: சூரிய ஒளி மின்சக்தி மேம்பாட்டிற்கு எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • நீதித்துறைக்கு ரூ.695.28 கோடி நிதி ஒதுக்கீடு. நீதிமன்றங்களுக்கு ரூ.148.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சென்னை-மாமல்லபுரம் தடம் 4 வழிச்சாலையாக மாற்றப்படும்
  • அகதிகளுக்கு காப்பீடு திட்டம்: முகாம்களுக்கு வெளியே வசிக்கும் இலங்கை அகதிகளுக்கும் மருத்துவக் காப்பீடு திட்டம்
  • நெடுஞ்சாலை ஆணையம்: தமிழகத்தில் நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்படும் என தகவல். நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.6,452 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • இளைஞர் நலம்: தமிழகத்தில்
    4ல் ஒருவர் 20 முதல் 25 வயதுடையவர். இளைஞர் திறன் வளர்ச்சிப் பயிற்சிக்கு
    கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். மாநில திறன் வளர்ப்பு மேம்பாட்டு
    பயிற்சித் திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ.25ல் இருந்து 100 கோடியாக
    உயர்த்தப்படும். உலகத் தரத்திலான பயிற்சி இளைஞர்களுக்கு அளிக்கப்படும்.
    ரூ.5 கோடி- தொழில் வளர்ச்சி திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு தொழில்
    கட்டமைப்புத் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

  • காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக நியமிக்க வேண்டும்.
  • தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.39.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த ரூ.1400 கோடி நிதி ஒதுக்கீடு
  • அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ. 750 கோடி நிதி ஒதுக்கப்படும்.
  • காய்கறி விலையை குறைக்க பசுபை் பண்ணைத் திட்டம் தொடங்கப்படும்
  • சென்னையில் 4 பெரிய மேம்பாலங்கள், மதுரையில் 2 மேம்பாலங்கள் கட்டப்படும்

Admin
Admin

Posts : 201
Join date : 15/03/2013

https://dinatamil.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும்:தமிழக அரசுக்கு கோரிக்கை
» பாலியல் வன்முறை தடுப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்
» தேர்தலை வீடியோவில் பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி
» ஸ்டெர்லைட் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது : உச்சநீதிமன்றம்
» இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என அறிவிக்க தமிழக எம்பிக்கள் கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum