Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     

Calendar Calendar

www.housetamil.blogspot.in

டெல்லி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி

Go down

டெல்லி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி Empty டெல்லி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி

Post by Admin Sun Mar 24, 2013 6:34 pm

புதுடெல்லி, மார்ச். 24-டெல்லி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி 9k=

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட்
போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 262 ரன் எடுத்தது. வேகப்பந்து வீரர் சிடில்
அதிகபட்சமாக 51 ரன் எடுத்தார். அஸ்வின் 5 விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர
முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன் எடுத்து இருந்தது. முரளிவிஜய் 57
ரன்னும், புஜாரா 52 ரன்னும் எடுத்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-வது நாள்
ஆட்டம் நடந்தது. இந்திய அணி தொடர்ந்து ஆடியது.
மேலும் 6 ரன் எடுப்பதற்குள் எஞ்சிய 2 விக்கெட்டும் விழுந்தது. இந்திய அணி
70.2 ஓவரில் 272 ரன்னில் `ஆல்அவுட்' ஆனது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரைவிட
10 ரன் கூடுதலாகும்.


எஞ்சிய 2 விக்கெட்டையுமே லயன் தான் கைப்பற்றினார். இஷாந்த் சர்மா (0), ஒஜா
(0) அவரது பந்தில் ஆட்டம் இழந்தார். நாதன் லயன் 94 ரன் கொடுத்து 7
விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


10 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்க
வரிசையில் மாற்றம் இருந்தது. வார்னருடன், மேக்ஸ்வெல் தொடக்க வீரராக களம்
இறங்கினார். ஆனால் இதற்கு எந்த பலனும் இல்லை.
இந்திய சுழற்பந்து வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியா
திணறியது. 53 ரன் எடுப்பதற்குள் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகளை தொடக்க
வீரர்கள் மேக்ஸ்வெல்,வார்னர் தலா 8 ரன்னிலும், எட்கோவன் 24 ரன்னிலும் ஜடேஜா
பந்தில் ஆட்டம் இழந்தனர்.

ஹியூக்ஸ் 6 ரன்னில் அஸ்வின் பந்திலும் கேப்டன் வாட்சன் 5 ரன்னில் ஒஜா
பந்திலும் ஆட்டம் இழந்தனர்.
ஆனால் 6-வது விக்கெட்டான ஸ்டீவன் சுமித்- வாடே ஜோடி இந்திய சுழற்பந்து
வீச்சை சமாளித்து ஆடியது.
மதிய உணவு இடை வேளையின் போது ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 89 ரன்
எடுத்து இருந்தது. சுமித் 17 ரன்னிலும், வாடே 16 ரன்னிலும் ஆட்டம்
இழக்காமல் இருந்தனர்.


மதிய உணவு இடை வேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரில் ஜடேஜா
அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டை எடுத்தார். முதல் பந்தில் சுமித்தும் (18
ரன்), 2-வது பந்தில் ஜான்சனும் (0) போல்டு ஆனார்கள். அவர் 5 விக்கெட்டை
கைப்பற்றினார். மேத்யூ வாடே (19 ரன்) விக்கெட்டை ஒஜா கைப்பற்றினார்.
அப்போது ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 125 ரன் என்ற நிலையில் இருந்தது.
அதன் பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழக்க ஆஸ்திரேலிய அணி
அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்னில் சுருண்டது. இந்திய பந்து
வீச்சாளர்கள் தரப்பில் ஜடேஜா 5 விகெட்டும், ஒஜா, அஸ்வின் தலா 2
விக்கெட்டும், இஷாந்த் சர்மா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி
பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக முரளி விஜய், புஜாராவும் களம் இறங்கி
நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். 4- வது ஓவரில் முரளி விஜய் 11 ரன்னில்
மேக்ஸ்வெல் பந்தில் போல்டு ஆனார்.

அடுத்து வந்த கோலி சிறிது நேரம் தாக்குபிடித்து விளையாடி அணியின் ஸ்கோரை
உயர்த்தினார். இருந்த போதிலும் கோலி 41 ரன் அடித்திருந்த நிலையில் லயன்
பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். அடுத்ததாக வந்த
சச்சின் 1 ரன்னிலும், ரகானே 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் புஜா அரை சதம் அடித்தார். ரகானே
அவுட்டை தொடர்ந்து பின்னர் களம் இறங்கிய கேப்டன் டோனி, புஜாவுடன் ஜோடி
சேர்ந்து விளையாடி அணியை வெற்றி பாதைக்கு இருவரும் அழைத்து சென்றனர். 31.2-
வது ஓவரில் இந்திய அணி 158 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில்
அபார வெற்றி பெற்றது. கேப்டன் டோனி 12 ரன்களிலும், புஜாரா 82 ரன்களிலும்,
களத்தில் இருந்தனர்.

இந்த டெல்லி டெஸ்டில் ஜடேஜா இரண்டு இன்னிங்சிலும் விளையாடி 7 விக்கெட்டை
கைப்பற்றி தொடர் நாயகன் விருதை பெற்றார். அஸ்வின் 4 டெஸ்ட் போட்டிகளில்
விளையாடி 29 விக்கெட்டை கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

இந்திய அணி 4-வது டெஸ்டில் வெற்றி பெற்றதன் முலம் வரலாற்று சாதனை
படைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 4 போட்டியிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது.
இதற்கு முன் ஆஸ்திரேலிய அணி 1969-70-ல் தென் ஆப்பிரிக்கா அணியிடம்
ஒயிட்வாஷ் ஆனது குறிப்பிடிடத்தக்கது.

Admin
Admin

Posts : 201
Join date : 15/03/2013

https://dinatamil.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum